6 மாதம் வாடகை தராத குடும்பம் - ஆத்திரத்தில் வீட்டின் உரிமையாளர் செய்த சம்பவம்!
வாடகை தராததால் வீட்டின் உரிமையாளர் மாடிப்படிகளை இடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
6 மாதம் வாடகை
காஞ்சீபுரம் விளக்கடி பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன். இவருக்கு சொந்தமான வீட்டின் மாடி தளத்தில் வேணுகோபால் என்பவரின் குடும்பத்துடன் வாடகைக்கு வைத்துள்ளார். கடந்த சில வருடங்களாக குடியிருந்து வரும் வேணுகோபால் ஒரு கூலி தொழிலாளி ஆவார்.
இந்த நிலையில், வேணுகோபாலுக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டதால் வீட்டிலேயே முடங்கினார்.இதனால் கடந்த 6 மாதங்களாக வாடகை பணம் கொடுக்கவில்லை. எனவே வீட்டின் உரிமையாளர் சீனிவாசன் வீட்டை காலி செய்யுமாறு கூறியிருக்கிறார்.
வீட்டின் உரிமையாளர்
ஆனால், அவர் வாடகை தராமல் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி விட்டு, வீட்டின் உரிமையாளர் சீனிவாசனிடம் வாடகை செலுத்த காலஅவகாசம் வாங்கி இருக்கிறார். அப்படியும் அவர் வாடகை செலுத்தவில்லை. ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் மாடி வீட்டுக்கு செல்லும் படிக்கட்டை ஜேசிபியை வைத்து தரைமட்டமாக இடித்துவிட்டார்.
அத்துடன் மின் இணைப்பையும் துண்டித்ததுடன், தண்ணீர் இணைப்பும் கட் செய்தார். இதனால், வேணுகோபால் குடும்பத்தினர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாடி வீட்டில் இருந்தவர்களை பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். பின்னர் வேணுகோபால் குடும்பத்தினரை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.