மீன் வளர்த்ததற்காக கூடுதல் வாடகை கேட்ட வீட்டின் உரிமையாளர் : வைரலாகும் புகைப்படம்
ஒரு பெண், செல்லப் பிராணிகளுக்கான வாடகை என்று மாதம் 15 டாலர் கூடுதலாக வீட்டு உரிமையாளர் தன்னிடம் வசூலித்ததாக பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
மீனிற்கு வாடகை
அமெரிக்காவை சேர்ந்த வோல்கர், TiKTok இல் இதைப் பற்றிய வீடியோவை வெளியிட்ட பிறகு இணையத்தில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நிக், ஒரு vlogger. வித்தியாசமான இடங்களுக்கு சென்று அது குறித்து விளக்கி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிடுவது இவரின் வேலை.
வைரலாகும் வீடியோ
இந்த நிலையில், சமீபத்தில் அவர் டிக்டாக்கில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். இது இணையத்தில் வைரலாகியுள்ளது. இவர் அமெரிக்காவில் வாடகை வீட்டில் தங்கி உள்ளார். ஆரம்பத்தில் இவருக்கு வீடு கொடுக்க ஹவுஸ் ஓனர்கள் மறுத்திருக்கிறார்கள். பெரும்பாலான ஹவுஸ் ஓனர்கள், செல்லப்பிராணிகளை வைத்திருந்தால் வீடு கொடுக்க மாட்டார்கள். அதேபோல இவருக்கும் வீடு தர மறுத்திருக்கிறார்கள்.
ஆனால் இவர் ஒரே சிறிய தங்க மீன்தான் வைத்திருக்கிறார். கடைசியாக ஒரு வீடு கிடைத்திருக்கிறது, அதுவும் நிபந்தனைகளுடன் நிக் தனது தங்கமீன் வளர்ப்பதற்காக வாடகையுன் கூடுதலாக 15 டாலர் ரூ.1,239 கொடுக்க வேண்டும் என்று ஹவுஸ் ஓனர் நிபந்தனை விதித்துள்ளார். இந்த வீட்டையும் விட்டுவிட்டால் வேறு வீடு கிடைக்காது என்பதால் நிக் இந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த வாடகை ரசீதை அவர் டிக்டாக்கில் பகிர்ந்திருந்தார். இது இணையத்தில் வைரலாகியுள்ளது. பலரும் இதற்கு எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மீன் எந்த விதத்தில் ஹவுஸ் ஓனருக்கு தொந்தரவாக இருந்துவிட போகிறது? என்றும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.