லேண்டர் தரையிறங்குவதில் தாமதம்; திக் திக் நிமிடங்கள் - நேரலையில் காணலாம்!

ISRO
By Sumathi Aug 22, 2023 03:12 AM GMT
Report

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வரும் 23 ஆம் தேதி தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சந்திரயான் 3

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நாளை மாலை 6.04 மணிக்கு நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது.

லேண்டர் தரையிறங்குவதில் தாமதம்; திக் திக் நிமிடங்கள் - நேரலையில் காணலாம்! | Lander Landing Will Be Postpone Live Telecast

தொடர்ந்து நிலவு வட்டப்பாதையில் சுற்றி வரும் ரோவர், லேண்டரின் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.லேண்டர் அபாயத்தைக் கண்டறிதல் மற்றும் தவிர்ப்பு கேமரா மூலம் நிலவின் தென் துருவத்தில் எடுத்த புகைப்படங்களை தொடர்ந்து அனுப்பி வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறினர்.

நேரலை

இதனிடையே, சாதகமான சூழல் இல்லை என்றால் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 தரையிறங்குவதற்கு சரியாக 2 மணிநேரத்திற்கு முன்பு, அது தரையிறங்குவது அப்போது சரியா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

சாதகமற்ற சூழல் நிலவினால் லேண்டரை தரையிறங்குவது ஆகஸ்டு 27-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை மாலை 5.27 மணி முதல் நேரலை ஒளிபரப்பு தொடங்கிவிடும்.

இஸ்ரோ இணையதளம் (https://www.isro.gov.in/) , யூடியூப் , இஸ்ரோவின் முகநூல் பக்கம் (https://www.facebook.com/ISRO/) மற்றும் டிடி நேஷனல் டிவி. சேனல் உள்ளிட்டவற்றில் இது நேரலையாக ஒளிபரப்பப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.