சந்திரயான் 3 நிலவில் தரையிறக்குவதில் சிக்கல்? சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது - ISRO அறிவிப்பு!

India Indian Space Research Organisation
By Jiyath Aug 20, 2023 09:31 AM GMT
Report

சந்திரயான் 3 தரையிறக்குவதில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சந்திரயான் 3

கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் (ISRO) கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சந்திரயான் 3 மிஷன் நிலவை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. நிலவின் புகைப்படங்களையும் இரண்டுமுறை சந்திரயான் 3 புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தது.

சந்திரயான் 3 நிலவில் தரையிறக்குவதில் சிக்கல்? சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது - ISRO அறிவிப்பு! | Changes In Chandrayaan 3 Landing Isro

பூமி சுற்றுவட்டப்பாதையை சுற்றி முடித்த பிறகு நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் விண்கலம் நுழைந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்துள்ளது. படிப்படியாக நிலவுக்கும் விக்ரம் லேண்டருக்கும் இடையேயான தூரம் குறைக்கப்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவில் சந்திரயான் 3 விண்கலத்தில் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு நடைபெற்றது.

நேர மாற்றம்

தற்போது நிலவில் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான இறுதி கட்ட வேலைகளை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது.  இந்நிலையில் நிலவில் சந்திரயான் 3 தரையிறக்கப்படும் நேரத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

முன்னதாக ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 5.45 மணிக்கு தரையிறக்கப்படும் என இஸ்ரோ அறிவித்திருந்தது . தற்போது சந்திரயான் 3 ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.