தீபம் பெயரில் விளக்கேற்றும் எண்ணெய் விற்கக்கூடாது.. தடை விதித்த நீதிமன்றம் - என்ன காரணம்?

Tamil nadu Chennai Madras High Court
By Swetha Oct 24, 2024 05:00 PM GMT
Report

தீபம் என்ற பெயரில் விளக்கேற்றும் எண்ணெய் வகைகள் விற்க இடைக்கால தடை விதிக்கப்படுள்ளது.

தீபம் எண்ணெய்

சென்னையை சேர்ந்த காளீஸ்வரி நிறுவனம் டிரேட் மார்க்குடன் எண்ணெய் வகைகளையும் 5 க்கும் மேற்பட்ட விளக்கேற்றும் எண்ணெய் வகைகளையும் விற்பனை செய்து வரும் பிரபல நிறுவனமாக இருந்து வருகிறது.

தீபம் பெயரில் விளக்கேற்றும் எண்ணெய் விற்கக்கூடாது.. தடை விதித்த நீதிமன்றம் - என்ன காரணம்? | Lamp Oil Under Name Deepam Is Banned By High Court

அதில் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் மிகவும் பிரபலமான டிரேட் மார்க்குடன் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவையை சேர்ந்த செல்வமாதா ஆயில் நிறுவனம் துர்கா தீபம் விளக்கேற்றும் எண்ணெய் என்ற பெயரில் ,

தங்களுடைய டிரேட் மார்க்கான தீபம் என்ற பெயரை பயன்படுத்தி விற்பனை செய்து வருகிறது. இது சட்டவிரோதமானது என்றும் இதனால் தங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் தீபம் என்ற தங்களுடைய டிரேட் மார்க்கை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என,

மீதி 50 பைசா தராத போஸ்ட் ஆபீஸ் - 15,000 அபராதம் விதித்த நீதிமன்றம்

மீதி 50 பைசா தராத போஸ்ட் ஆபீஸ் - 15,000 அபராதம் விதித்த நீதிமன்றம்

என்ன காரணம்?

காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தீபம் விளக்கேற்றும் எண்ணெய் உலக அளவில் சந்தைப்படுத்த முயற்சி எடுத்து வரும் நிலையில் ,

தீபம் பெயரில் விளக்கேற்றும் எண்ணெய் விற்கக்கூடாது.. தடை விதித்த நீதிமன்றம் - என்ன காரணம்? | Lamp Oil Under Name Deepam Is Banned By High Court

தங்களுடைய நிறுவனத்தின் தீபம் என்ற டிரேட் மார்க் சில நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி லாபமடைந்து வருவதாக காளீஸ்வரி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த நிறுவனங்கள், தீபம் என்ற டிரேட் மார்க்கை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால்

தீபாவளி பண்டிக்கையொட்டி நடக்கும் வணிகத்தில் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வாதம் வைக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, தீபம் என்ற டிரேட் மார்க் பெயரை பயன்படுத்தி விளக்கேற்றும் எண்ணெய் வகைகளை விற்க செல்வமாதா ஆயில் நிறுவனத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.