மீதி 50 பைசா தராத போஸ்ட் ஆபீஸ் - 15,000 அபராதம் விதித்த நீதிமன்றம்

Tamil nadu Chennai
By Karthikraja Oct 23, 2024 06:30 PM GMT
Report

50 பைசா மீதி தராத போஸ்ட் ஆபிஸ்க்கு 15000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ 29.50க்கு தபால்

சென்னை கிருகம்பாக்கத்தை சேர்ந்த மானுஷா என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி பொழிச்சலூர் தபால் நிலையத்தில் பதிவு தபால் ஒன்றை அனுப்பியுள்ளார். 

50 paise

அவரது தபால் அனுப்புவதற்கு ரூ. 29.50 செலவானது. டிஜிட்டல் பேமண்ட் பழுதாகி உள்ளதால் ரூ. 30 கொடுக்கச் சொல்லி தபால் அலுவலர் வலியுறுத்தியுள்ளார். 

மத்திய அமைச்சருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ் - என்ன காரணம் தெரியுமா?

மத்திய அமைச்சருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ் - என்ன காரணம் தெரியுமா?

50 பைசா பறிப்பு

மானசா தனது 50 பைசாவை திரும்ப கேட்ட போது, கணினியில் ₹30 காட்டியதாக தெரிவித்து, மீதி காசு கொடுக்க தபால் அலுவலர் மறுத்தார். மேலும், இதனால் விரக்தியடைந்த மானசா, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார். 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தினமும் லட்சக்கணக்கான பரிவர்த்தனைகள் நடக்கும் அஞ்சல் துறையில் ஒவ்வொருவரிடமிருந்தும் 50 பைசா பறிப்பது பெரும் மோசடி என மானசா தனது வாதத்தை முன்வைத்தார். 

post office 50 paise

50 காசு போன்ற பைசாக்களில் வரும் கட்டணம் ரூ.1 ஆக மாறும் வகையில் தபால் துறையின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை தரப்பில் தெரிவித்தனர்.

நீதிமன்ற அபராதம்

இந்நிலையில் அஞ்சல் துறை 50 பைசா அதிகம் பெற்றதை ஒப்புக்கொண்டதால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் பிரிவு 2(47) கீழ் நியாமற்ற வர்த்தக நடைமுறை எனக் கூறி அஞ்சல் துறைக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அபராதம் விதித்துள்ளது.

இதில் மானசாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ. 10,000, வழக்கு செலவிற்கு ரூ. 5,000 மற்றும் அவருக்கு திருப்பி கொடுக்க வேண்டிய 50 பைசா என மொத்தம் ரூ. 15000.50 வழங்க உத்தரவிட்டது.