நம்பி ஏமாந்துட்டேன் சார்... உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு போலீஸாரிடம் புலம்பிய பேராசிரியர்!
பாலியல் தொழிலாளி ஒருவர், காவலன் ஆப் மூலம் போலீசாரை வரவழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவலன் செயலி
சென்னை வேளச்சேரி தரமணி 100அடி சாலை சீத்தாபதி நகர் விரிவில் இயங்கி வரும் சாய் ரமேஷ் கெஸ்ட் ஹவுஸில் இருந்து காவலன் செயலி மூலம் பெண்கள் ஆபத்தில் சிக்கியிருப்பதாக போலீசார்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அங்கு விரைந்த போலீஸார், போன் செய்த பெண்ணையும், அவரோடு சேர்த்து அங்கிருந்த மற்றொரு பெண் மற்றும் இரு ஆண்களையும் போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பாலியல் தொழிலாளி
விசாரணையில், காவலன் ஆப் மூலம் தான் ஆபத்தில் சிக்கியிருப்பதாக கூறியிருந்த பெண் ஒரு பாலியல் தொழிலாளி என்பது தெரியவந்தது. ஆவடியில் தனியார் கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர் ஒருவர், தனது நண்பரோடு சேர்ந்த ஆன்லைன் ஆப் மூலம், புரோக்கர் வாயிலான இரண்டு பெண்களை புக் செய்துள்ளார்.
கோயம்பேடு சென்று அந்த இரண்டு பெண்களையும் தனது காரில் அழைத்து சென்றுள்ளனர். ஒரு பெண்ணுக்கு ரூ.11,000வீதம் இரண்டு பெண்களுக்கு ரூ.22,000 கொடுத்துள்ளார் உதவி பேராசிரியர். வேளச்சேரியில் ரூம் எடுத்து நால்வரும் உல்லாசமாக இருந்த நிலையில்,
பேராசிரியர் புலம்பல்
சிறிது நேரம் கழித்து மீண்டும் உதவி பேராசிரியர் அப்பெண்ணை உறவிற்கு அழைத்துள்ளார். ஆனால் அப்பெண்ணோ முடியாது என மறுப்பு தெரிவிக்க, உதவி பேராசிரியர் வலுகட்டாயமாக உறவிற்கு பலவந்தபடுத்தியதாக கூறப்படுகிறது.
அவரிடம் இருந்து தப்பி கழிவறைக்கு சென்ற பெண், காவலன் செயலி ஆப் மூலம் ஆபத்தில் இருப்பதாக கூறி காவலர்களை வரவழைத்தது விசாரணையில் அம்பலமானது.