காதை கடித்து விழுங்கிய பெண் பாலியல் தொழிலாளி - இதுதான் காரணமா?
சுற்றுலாப் பயணி ஒருவரின் காதை, பெண் பாலியல் தொழிலாளி கடித்து விழுங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் தொழிலாளி
தாய்லாந்தைச் சேர்ந்தவர் கன்னிகா காம்டன்(25). பாலியல் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று இவர் அளவுக்கு அதிகமாக மதுவை குடித்துள்ளார்.
இதனால் நடக்க கூட முடியாமல் திணறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, பட்டாயா பகுதியில் உள்ள சின்சிட்டியில் பெருந்து ஒன்றில் ஏறியுள்ளார். அதே பேருந்தில், 55 வயதுடைய சுற்றுலா பயணி ஒருவர் அமர்ந்துள்ளார்.
சுற்றுலா பயணி
அவருக்கு அருகே கண்ணிகா உட்காந்திருந்தார். இந்நிலையில், திடீரென சுற்றுலா பயணியை முறைத்து பார்த்த படி இருந்துள்ளார் கன்னிகா. தொடர்ந்து தனது பல்லை கடித்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
திடீரென கன்னிகா அந்த சுற்றுலா பயணியின் காதை பயங்கரமாக கடித்துள்ளார். இதனால் வலி தங்க முடியாமல் துடித்துள்ளார் அவர். அதனையடுத்து அவரை சக பயணிகள் மீட்டு மருத்துவமனியில் அனுமதித்துள்ளனர்.
காதை கடித்த பெண்
அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவர் சார்பில் புகாரும் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து கன்னிகாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து லெப்டினென்ட் கர்னல் சாய்ஜாய் காம்சுலா கூறுகையில், ‛‛காதை கடித்து விழுங்கிய பெண்ணை கைது செய்துள்ளோம். கைது நடவடிக்கையின்போது அந்த பெண் போலீஸ் அதிகாரியையும் காலால் உதைத்து தாக்கினார்.
கைதாகி உள்ள பெண் விபசார தொழில் செய்து வருகிறார். இந்த சம்பவத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்'' என தெரிவித்தார்.