Saturday, May 10, 2025

56 வயதில் காதலியை அறிமுகப்படுத்திய லலித்மோடி.. விரைவில் திருமணம்?

India Gossip Today Indian Actress
By Sumathi 3 years ago
Report

முன்னாள் பிரபஞ்ச அழகியும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென்னும் தானும் காதலிப்பதாக ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித்குமார் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 லலித்குமார் மோடி

ஐபிஎல் போட்டிகளை முதன்முதலில் உருவாக்கி பிரபலமானவர் லலித்குமார் மோடி, இவர் மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். ஆனால் ஐபிஎல் போட்டியில் பணமோசடி மற்றும் ஊழல் புகாரில் சிக்கிய அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

அதன்பின் அவர் வெளிநாடு தப்பி சென்றுவிட்டார். 56 வயதான லலித் குமார் மோடிக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. அவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சுஷ்மிதா சென்

அதேசமயம் சுஷ்மிதா சென், கடந்த 2 மாதங்களுக்கு முன், தனது காதலரான ர்ஹ்மன் ஷாலுடன் தனது காதலை முறித்துக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது லலித் மோடியுடன் சுஷ்மிதா சென் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.46 வயதான சுஷ்மிதா சென்னை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் லலித் மோடி அறிவித்திருப்பது

அவரது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.