ஃபோட்டோவ மார்பிங் செய்து மிரட்டுராங்க - கதறி அழுத சீரியல் நடிகை!

Viral Video Serials
By Sumathi 2 மாதங்கள் முன்

தன்னுடைய புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிடுவோம் என மிரட்டுவதாக நடிகை லட்சுமி வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

லட்சுமி வாசுதேவன்

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியல் மூலம், சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன். இதனை தொடர்ந்து பல சீரியல்களில் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல முன்னணி சீரியல்களில் அம்மா பாத்திரங்களில் நடித்து வரும் இவர்,

ஃபோட்டோவ மார்பிங் செய்து மிரட்டுராங்க - கதறி அழுத சீரியல் நடிகை! | Lakshmi Vasudevan Crying Video Goes Viral

கதறி அழுத வீடியோ ஒன்றை தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "தனது புகைப்படத்தை மார்பிங் செய்து வாட்ஸ் அப் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்புகின்றனர். கடந்த செப்டம்பர் 11 எனக்கு 5 லட்சம் பரிசு விழுந்ததாக கூறி ஒரு குறுஞ்செய்தி வந்தது.

மிரட்டல்

அதனுடன் வந்த ஒரு லிங்கை தொட்ட உடன் ஆப் பதிவிறக்கம் ஆனது. அதிலிருந்து என் மொபைல் ஹேக் ஆனது. அதன்பின் 3 நாட்கள் கழித்து மர்மநபர்கள் எனக்கு போன் செய்து, 'நீங்கள் 5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளீர்கள் அதை திரும்ப செலுத்துங்கள்'என கூறி குறுஞ்செய்தி வந்து கொண்டே இருந்தது.

ஃபோட்டோவ மார்பிங் செய்து மிரட்டுராங்க - கதறி அழுத சீரியல் நடிகை! | Lakshmi Vasudevan Crying Video Goes Viral

தொடர்ந்து மோசமாக பேசி புகைப்படங்களை மாப்பிங் செய்து வைரலாக்கி விடுவோம் என மிரட்டினர். என்னுடைய வாட்சப் நண்பர்களுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் அனுப்புகிறார்கள்" என கதறி அழுதப்படி கூறினார்.

இது குறித்து சைபர் பிரிவில் புகார் கொடுத்துள்ளதாகவும், இனிமே யாரும் இது போன்ற தேவையில்லாத ஆப்புகளை டவுன்லோட் செய்ய வேண்டாம் என்றும், எச்சரிக்கையுடன் இருங்கள் என்றும் கண்ணீருடன் பேசியுள்ளார். பிரபல சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட இந்த நிலை குறித்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.