வலியால் துடித்த மகள்; 1 வருஷமா வேதனை - மனம் திறந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்
தன்னுடைய மகள் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் உருக்கமாக பேசியுள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணன்
தமிழில் நாவல் ,பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்கள் மூலம் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். அதைத் தொடர்ந்து எல்லாம் அவன் செயல், பாஸ் என்ற பாஸ்கரன், விண்ணைத்தாண்டி வருவாயா, நான் மகானல்ல, உட்பட 30 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், இவர் தொகுத்து வழங்கிய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் தான் பிரபலமானார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், எனது மகளுக்கு கொரோனாவா அல்லது என்ன பிரச்சனை என்று எங்களுக்கு தெரியவில்லை. அந்த நேரத்தில் வயிற்றில் அதிகமான வலி வந்தது.
உருக்கம்
வலியில் என் மகள் அதிகமாக துடித்திருக்கிறார். அப்போது மருத்துவமனையில் சென்று எல்லா டெஸ்டும் எடுத்துப் பார்த்தாலும் ஒன்றும் இல்லை என்று கூறி விட்டார்கள். பிறகு வயிற்றில் கணையம் பகுதிகளை பாதிக்கும் நேரத்தில் தான் தெரிந்தது. இதை பெரிய அளவில் தான் ஆபரேஷன் செய்து எடுக்க வேண்டும் வயிற்றில் எங்கெல்லாம் அந்த பாதிப்பு இருக்கிறதோ அதை எல்லாம் வெட்டி எடுத்து விட வேண்டும் என்றார்கள்.
குறிப்பிட்ட நாளில் ஆபரேஷன் செய்ய மகளுக்கு பல ஸ்கேன் எடுத்து பார்த்து பிறகு பாதிப்பின் அளவு ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது குறைந்துவிட்டது. இது மெடிக்கல் மிராக்கல். இது உங்களுடைய வில் பவர் மற்றும் உணவு கட்டுப்பாட்டால் தான் நடந்திருக்கிறது என்று பாராட்டினார்கள். இப்போது அந்த பிரச்சனை முழுமையாக போய்விட்டது. என்னுடைய மகளும் ரெஸ்டில் இருக்கிறார்.
அதோடு எல்லோருமே வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை வந்தது என்றால் நம்முடைய வாழ்க்கை முடிந்து விட்டது என்று நினைக்க கூடாது. எப்படியும் கடைசி நேரத்தில் கூட நாம் உறுதியாக இருந்தால் அது மாற்றம் அடைந்து விடும் எனத் தெரிவித்துள்ளார்.