லாரன்ஸ் உயிருக்கு ஆபத்தா இருக்கும்..? முதல் முறை மனம்திறந்த லட்சுமி ராமகிருஷ்ணன்...!!

Lakshmy Ramakrishnan Tamil Actors
By Karthick Dec 25, 2023 12:26 PM GMT
Report

சில நாட்களாகவே 110 கிலோ லாரன்ஸ் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகின்றார்.

லாரன்ஸ்

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிய நிலையில், தற்போது திடீரென ட்ரெண்டாகி உள்ளார் லாரன்ஸ். மேடம் இது action madam என்றும் 110 கிலோ தூக்குற இந்த லாரன்ஸ் என்ற அவர் கூறியவை இன்று ட்ரெண்டிங் டாபிக்காக மாறியுள்ளது.

lakshmi-ramakrishnan-about-viral-110-kg-lawrence

யார் இந்த லாரன்ஸ், இப்பொது எங்கிருக்கிறார் என்றெல்லாம் தேடல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், லாரன்ஸ் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளினி லட்சுமி ராமகிருஷ்ணன் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

சாரி பாவனா - ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த செயல் - மன்னிப்பு கேட்ட அஜித்..! வைரல் வீடியோ..!

சாரி பாவனா - ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த செயல் - மன்னிப்பு கேட்ட அஜித்..! வைரல் வீடியோ..!

தனியார் பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இது குறித்து பல தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் இது குறித்து பேசும் போது, “‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி மூலமா படிக்காதவர்களிடம் நிறைய திறமைகளும் ஹ்யூமர் சென்ஸும் இருப்பதை பார்த்ததாக சொன்ன அவர், அன்னைக்கு லாரன்ஸ் வந்தது இப்பவும் ஞாபகத்துல இருக்கிறது என்றார்.

திறமைசாலி லாரன்ஸ்

அவருக்குள்ள அப்படியொரு காமெடி சென்ஸ் இருப்பதாக குறிப்பிட்ட லட்சுமி ராமகிருஷ்ணன், அதனாலதான், அவரு பேசினபோதும் ஆக்‌ஷன் பண்ணினபோதும் அமைதியா இருந்தோம் என்று குறிப்பிட்டு, அந்தத் திறமையும் மக்களுக்குத் தெரியணும்னுதான் அப்படியே ஒளிபரப்பினோம் என்றார்.

lakshmi-ramakrishnan-about-viral-110-kg-lawrence

அவர் தப்பு பண்ணிட்டு வந்திருந்தாக்கூட அவரோட திறமையை ரசிச்சோம் என்ற அவர், அதேநேரத்துல, அவருடைய தப்பையும் நியாயப்படுத்தல என்று தெரிவித்து லாரன்ஸுக்கு இருக்குற திறமைக்கு, சினிமாவுல வாய்ப்பு கிடைச்சிருந்தா இன்னைக்கு ஒரு பெரிய காமெடியனா வந்திருப்பாரு என்று புகழாரம் சூட்டினார்.

அப்படியொரு திறமையைப் பார்த்ததாக குறிப்பிட்ட லட்சுமி ராமகிருஷ்ணன், எங்க நிகழ்ச்சி மூலமா நிறைய உதவிகளை செய்ததாக குறிப்பிட்டு ஆனால், லாரன்ஸுக்கு தங்களோட பண உதவி தேவைப்படல என்று கூறி, அவர் திருந்தி குடும்பத்தோடு வாழ, ஆலோசனை மட்டுமே தேவைப்பட்டது என்றார்.

கமலுடன் முத்தக்காட்சி சீன் - கேரவன்-ல கதறி அழுதேன் - போட்டுடைத்த மீனா..!

கமலுடன் முத்தக்காட்சி சீன் - கேரவன்-ல கதறி அழுதேன் - போட்டுடைத்த மீனா..!

பிரிஞ்சு வந்த குடும்பத்தை ஒண்ணு சேர்த்து அனுப்பினதுல எங்களுக்கு ஆறுதல்தான் என்ற அவர், நாங்க, அப்படிச் செய்யலைன்னா லாரன்ஸ் கண்ணனையோ அல்லது கண்ணன் லாரன்ஸையோ ஏதாவது செய்திருப்பாங்க என்று தெரிவித்து உயிருக்கு ஆபத்தா முடிஞ்சிருக்கும் என்றும் கூறினார்.

lakshmi-ramakrishnan-about-viral-110-kg-lawrence

எந்த உதவியும் தேவைப்படலங்குறதால லாரன்ஸ் எங்களோட தொடர்பில் இல்லை என்று தெரிவித்து அவர் இப்போ என்ன பண்றாரு, எங்க இருக்காருன்னு தெரியல என்றும் கூறினார் லட்சுமி ராமகிருஷ்ணன்.


நன்றி - விகடன்