ஆடையில்லாமல் நடிக்க சொன்ன தயாரிப்பாளர்; நடுங்கிய ஸ்ரீதேவி - ரகசியம் உடைத்த நடிகை

Sumathi
in பிரபலங்கள்Report this article
இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகவும், இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி.
நடிகை ஸ்ரீதேவி
பாலிவுட் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துக் கொண்ட இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.தனது மருமகன் மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது துபாய் ஹோட்டல் குளியல் தொட்டியில் அவர் இறந்து கிடந்தார். இந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிறுவயதில் ஸ்ரீதேவி அனுபவித்த கஷ்டங்கள் குறித்து நடிகை லட்சுமி பகிர்ந்துள்ளார். அதில், ஒரு படத்தில் எனக்கும் நடிகர் ஜெய்சங்கருக்கும் மகளாக ஸ்ரீதேவி 6 வயதாக இருக்கும் போது நடித்தார். அப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் போது தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்சனையால் அப்படம் நின்றுபோனது.
சிறுவயது துயரம்
அதன்பின் காலம் ஓடி 4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தயாரிப்பாளர் அப்படத்தினை எடுக்கலாம் என்றும் நீங்கள் ஒத்துழைக்கவேண்டும் என்று கேட்டுகொண்டார். அன்று ஷூட்டிங் ஆரம்பித்த போது ஸ்ரீதேவிக்கு 10 வயது. பெண்ணாக மலரத்துவங்கும் வயதில் கிளைமேக்ஸ் காட்சி நடந்தது. அப்போது ஸ்ரீதேவியை மேலாடையில்லாமல் தலைகீழாகத் தொங்கவிடும் காட்சியாக இருந்தது.
இதை கேட்ட ஸ்ரீதேவி என்னிடம், அக்கா எனக்கு சட்டை இல்லாமல் நிற்க ஒருமாதிரியாக இருக்கிறது என்று கெஞ்சிகேட்டாள். உடனே இந்த சீனை மாற்ற முடியாதா என்று சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டதற்கு அதெல்லாம் முடியாது கதையின் கண்ட்டினியூட்டி சீன் என்று சொல்லிவிட்டார்கள்.
அப்போது ஸ்ரீதேவியின் வேதனை, அவமானம் பிடுங்கித்தின்ன, உதவுகள் துடிக்க கண்ணீர் விட்டு நின்றாள்.
இதை அறிந்த ஸ்ரீதேவி அம்மா ராஜேஸ்வரி, தயாரிப்பாளரிடம் சென்று மன்னிச்சுக்குங்க சார் இந்த சீனில் என் மகள் நடிக்கமாட்டாள். இப்படி நடிச்சு பொழைக்கணும்னு அவசியமில்லை என்று அவமானப்படுத்திவிட்டு சென்றுவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.