நடிகை ஸ்ரீதேவியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட ஸ்டார் நடிகர் - பெண் கொடுக்க மறுத்த தாய்

Rajinikanth Sridevi Tamil Cinema Marriage
By Thahir Feb 26, 2023 05:40 AM GMT
Report

நடிகை ஸ்ரீதேவியை பிரபல நடிகர் ஒருவர் பெண் கேட்டதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

பகீர் கிளப்பிய பயில்வான் 

சினிமா பிரபலங்கள் குறித்தும் சினிமாதுறையில் நடக்கும் விஷயங்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வம்பில் மாட்டி வருகிறார்.

பயில்வான் ஆரம்ப கட்டத்தில் நடிகராக பல படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு சினிமா மூலமாக பத்திரிக்கையாளராக கூறி வருகிறார். இவர் பல்வேறு நடிகர்களை பற்றி கிசுகிசுக்களை பற்றியும் கூறி வருகிறார்.

An actor who wanted to marry actress Sridevi

அந்த வகையில் மூத்த நட்சத்திர நடிகர்களை பற்றி கூட அண்மையில் ஒரு கிசுகிசுவை கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

ஸ்ரீதேவியை பெண் கேட்ட பிரபலம் 

அதில் நடிகை ஸ்ரீதேவி 80 காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை என்று கூறலாம். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்து வந்தார். அப்போது முன்னணி நடிகையாக இருந்து வந்த அவர் சந்திக்காத கிசுகிசுக்களே கிடையாது என்று சொல்லலாம்.

An actor who wanted to marry actress Sridevi

அந்த சமயத்தில் நடிகர் ரஜினி நடிகை ஸ்ரீதேவியை காதலித்து வந்ததாகவும், ஸ்ரீதேவி அம்மாவிடம் சென்று ரஜினி பெண் கேட்டதாகவும் பயில்வான் தெரிவித்துள்ளார்.

அப்போது பதறிப்போன ஸ்ரீதேவி அம்மா, தன் மகள் இப்போது தான் ஓர் நல்ல நிலைக்கு வந்துள்ளதாக கூறி இப்போதைக்கு தன் மகள் ஸ்ரீதேவிக்கு திருமணம் செய்யும் எண்ணம் இப்போது தனக்கு இல்லை என ரஜினியிடம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதனை ஸ்ரீதேவி அம்மா கூறியதாக பயில்வான் ரங்கநாதன் ஓர் வீடியோவில் தெரிவித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.