லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம்? மாப்பிள்ளை யார் தெரியுமா!
நடிகை லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லட்சுமி மேனன்
தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த‘கும்கி’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை லட்சுமி மேனன்(27). தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டி புலி, மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம்,

மிருதன் படங்களில் நடித்து பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். அதன்பின் மேல் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக திரைப்படங்களில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். அதனையடுத்து, விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்திருந்தார்.
திருமணம்?
இதற்கிடையில், விஷாலுடன் இணைந்து, பாண்டிய நாடு, நான் சிவப்பு மனிதன் போன்ற படத்தில் நடித்திருந்தார். அதில் கெமிஸ்ட்ரி பக்காவாக இருந்ததால் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இவருக்கு விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணம் செய்து கொள்ளப்போகும் மாப்பிள்ளை பிரபல நடிகர் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, சிப்பாய் என்ற படத்திலும், சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்! ஹோர்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் நிபந்தனை IBC Tamil
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil