தனியாக கூப்பிடுவாரு...கூப்பிட்டு..!! பிரபலம் இயக்குனரின் உண்மை முகம்.! போட்டுடைத்த லட்சுமி மேனன்

Karthick
in பிரபலங்கள்Report this article
லட்சுமி மேனன் இறுதியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான "சந்திரமுகி 2" படத்தில் நடித்திருந்தார்.
லட்சுமி மேனன்
கும்பி, சுந்தரபாண்டியன், பாண்டிய நாடு என அறிமுகமான முதல் சில படங்களிலேயே பெரும் வெற்றியை பதிவு செய்தவர் லட்சுமி மேனன்.
தொடர்ந்து குட்டி புலி, மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, மிருதன் படங்களில் நடித்து பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார் லட்சுமி மேனன். கடைசியாக இவர், ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார்.
தனியாக அழைத்து
இந்நிலையில், படத்தில் நடித்தது தொடர்பான அனுபவங்களை பேட்டி ஒன்றில் லட்சுமி மேனன் தெரிவித்திருந்தார். அந்த பேட்டியில், படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் திட்டும் பழக்கத்தை கொண்டவர் பி.வாசு.
அவர் அவ்வாறு ஒரு முறை என்னை திட்டிய போது, மனவேதனை அடைந்ததாக கூறிய லட்சுமி மேனன், அவரிடம் என்னை திட்ட வேண்டும் என்றால், தனியாக அழைத்து திட்டுங்கள் என கேட்டுக்கொண்டதாக கூறினார்.
அதனை தொடர்ந்து எப்போது என் மீது கோபம் ஏற்பட்டாலும், தனியாக அழைத்து தான் பி.வாசு திட்டுவார் என்று லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார்.