பிள்ளைகளை பிச்சையெடுக்க வைத்த கொடூர தாய் - ஒரே மாதத்தில் ரூ. 2.5 லட்சம் சம்பாத்தியம்!

India Crime Madhya Pradesh
By Jiyath Feb 14, 2024 05:33 AM GMT
Report

பிள்ளைகளை கட்டாயப்படுத்தி பிச்சையெடுக்க வைத்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.  

கொடூர தாய் 

மத்திய பிரேதச மாநிலம் இந்தூர் பகுதியில் வசித்து வருபவர் இந்திரா பாய் (40). இவர் தனது 8 வயது மகள் மற்றும் 2 மகன்களை சாலைகளில் பிச்சை எடுக்க வைத்துள்ளார். அதன் மூலம் கடந்த 45 நாட்களில் சுமார் ரூ.2.50 லட்சம் சம்பாதித்துள்ளார்.

பிள்ளைகளை பிச்சையெடுக்க வைத்த கொடூர தாய் - ஒரே மாதத்தில் ரூ. 2.5 லட்சம் சம்பாத்தியம்! | Lakhs Incident Mother Forced Her Children To Beg

இந்நிலையில் பர்வேஷ் என்ற தனியார் தொண்டு நிறுவன தலைவி ரூபாலி, இந்தூர்-உஜ்ஜைன் சாலையில் தனது குழந்தைகளுடன் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த இந்திராபாயை மீட்டனர்.

பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க தனது பிள்ளைகளை கட்டாயப்படுத்தி பிச்சையெடுக்க வைத்ததும் தெரியவந்தது. அந்த பெண்ணின் பையை சோதனை செய்ததில், அதில் ரூ.19,500 பணம் இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

நள்ளிரவில் வீட்டுக்கு அழைத்த பெண்; நம்பி சென்ற தொழிலதிபர் - இறுதியில் நேர்ந்த சோகம்!

நள்ளிரவில் வீட்டுக்கு அழைத்த பெண்; நம்பி சென்ற தொழிலதிபர் - இறுதியில் நேர்ந்த சோகம்!

கைது 

மேலும், கடந்த 45 நாட்களில் இந்திராபாய் சம்பாதித்த சுமார் ரூ.2.50 லட்சம் பணத்தில், ரூ.1 லட்சத்தைத் தனது மாமியாருக்கு அனுப்பியதாகவும், ரூ.50,000 பணத்தை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ததாகவும், ரூ.50,000 பணம் வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக முதலீடு செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

பிள்ளைகளை பிச்சையெடுக்க வைத்த கொடூர தாய் - ஒரே மாதத்தில் ரூ. 2.5 லட்சம் சம்பாத்தியம்! | Lakhs Incident Mother Forced Her Children To Beg

மேலும், ராஜஸ்தானில் இந்திராபாய்க்கு சொந்தமாக ஒரு அடுக்குமாடி வீடும் உள்ளது. அவரது கணவர் சமீபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார். அதில்தான் இருவரும் ஊர்ச்சுற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் அவரின் 2 மகன்கள் தொண்டு நிறுவன ஊழியர்களை பார்த்ததும் ஓடிவிட்டதாகவும், 8 வயது சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்த இந்திராபாயை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.