71 வயது முதியவருடன் நெருக்கம்.. ஃபோட்டோஸ் லீக் செய்வேன் என மிரட்டிய இளம்பெண்!

Kerala Relationship Money
By Sumathi Oct 14, 2022 02:43 PM GMT
Report

71 வயது முதியவருடன் தனிமையில் இருந்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விடுவதாக இளம்பெண் மிரட்டியுள்ளார்.

முதியவருடன் பழக்கம்

கேரளா திரிச்சூரில் , எருமபட்டி - திப்பிலசேரி பகுதியை சேர்ந்தவர் ராஜி(35). இவர் குந்நங்குளம் என்ற பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவருடைய ஆண் நண்பர் மூலமாக சாவக்காடு பகுதியை சார்ந்த 71 வயது வசதியான முதியவர் ஒருவருடன் ராஜிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

71 வயது முதியவருடன் நெருக்கம்.. ஃபோட்டோஸ் லீக் செய்வேன் என மிரட்டிய இளம்பெண்! | Lady Threatened Old Man For Secret Photos Kerala

கடந்த 20 வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து நல்ல வசதியுடன் வாழ்ந்து வருவதை அறிந்த ராஜி, முதியவருடன் நெருக்கமாக பழகியுள்ளார். ராஜியும், முதியவரும் இவருடைய பியூட்டி பார்லர் அறை ஒன்றில் தனிமையாக இருந்து உள்ளனர்.

மிரட்டிய இளம்பெண்

தனிமையாக இருக்கும் புகைப்படங்களையும் ராஜி தனது செல்போன்களில் எடுத்துள்ளார். இதனையடுத்து இந்த நிர்வாண புகைப்படங்களை உறவினர்களிடம் காட்டி விடுவேன் என்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டி ரூ.50 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.

தொடர்ந்து அந்த முதியவரிடமிருந்து ராஜி ரூ.3 லட்சம் வரை மிரட்டி பறித்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த முதியவர் இது தொடர்பாக குந்நங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதை அடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் ராஜியை கைது செய்தனர். தொடர்ந்து இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முதியவருடன் பழகி ஆண் நண்பருடன் சேர்ந்து பணம் பறிக்க முயன்றதாக தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராஜியின் ஆண் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.