காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பெண் செய்தியாளர் மீது பயங்கர தாக்குதல் - நடந்தது என்ன?

Indian National Congress Karnataka Lok Sabha Election 2024
By Swetha Mar 29, 2024 03:19 AM GMT
Report

கர்நாடகாவில் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பெண் செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொது கூட்டம்

நடப்பாண்டின் மக்களவை தேர்தலில் கர்நாடகாவின் பெங்களூரு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரின் சகோதரர், டி கே சுரேஷ் வேட்பாளராக போட்டியிட உள்ளனர்.

காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பெண் செய்தியாளர் மீது பயங்கர தாக்குதல் - நடந்தது என்ன? | Lady Reporter Attacked During Congress Meeting

இந்நிலையில், இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய அவர் ஏராளமாக தொண்டர்களுடன் பிரம்மாண்ட பேரணியாக சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக டி.கே.சிவக்குமார் மற்றும் டி.கே.சுரேஷ் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், 50-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் காத்திருந்தனர். அப்போது, செய்தியாளர்களுக்கிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, வாக்குவாதம் உருவானது.

மக்களவை தேர்தல் - தமிழக காங்கிரஸின் 2 தொகுதி வேட்பாளர் தேர்வில் இழுபறி - என்ன காரணம்?

மக்களவை தேர்தல் - தமிழக காங்கிரஸின் 2 தொகுதி வேட்பாளர் தேர்வில் இழுபறி - என்ன காரணம்?

பயங்கர தாக்குதல்

செய்தியாளர் ஒருவர் அங்கு நின்றிருந்த பிடிஐ பெண் செய்தியாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கன்னத்தில் அறைந்ததோடு தொடர்ந்து தாக்கவும் செய்தார். இதை கவனித்த சக செய்தியாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இருவரையும் தடுத்து நிறுத்தினர்.

காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பெண் செய்தியாளர் மீது பயங்கர தாக்குதல் - நடந்தது என்ன? | Lady Reporter Attacked During Congress Meeting

மேலும் பெண் செய்தியாளரை தாக்கிய சக செய்தியாளரையும் கடுமையாக கண்டித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கபட்டு அவர் மீது சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் செய்தியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.