வேலை தேடி வந்த சிறுமி - மயக்க மருந்து கொடுத்து இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை!
மயக்க மருந்து கொடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
உத்தரப்பிரதேசம், பக்ரச் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி பெற்றோருடன் சண்டையிட்டுள்ளார். அதன்பின் திருப்பூருக்கு ரயில் மூலம் வந்துள்ளார். அங்கு இறங்கிய அவரை ரூபேஷ் என்ற பீகாரைச் சேர்ந்த தொழிலாளி,
தான் பணியாற்றும் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். தொடர்ந்து, காங்கேயம் அடுத்த சிவன்மலை அருகே உள்ள ஒரு வீட்டிற்கு கூட்டிச் சென்றதில், வீட்டு உரிமையாளர்களிடம் சிறுமி தங்களுக்கு தூரத்து சொந்தம் எனக் கூறியுள்ளார்.
போக்சோவில் கைது
மேலும், அங்கிருந்த மற்றொரு தொழிலாளியான நித்தீஷ் என்பவரை அறிமுகம் செய்து வைத்து புத்தாண்டிற்காக கேக் வெட்டியுள்ளனர். தொடர்ந்து, மதுபானம் அருந்துமாறு கட்டாயப்படுத்தியதில் அவர் மறுத்ததால் குளிர்பானம் கொடுத்துள்ளனர். அதனை குடித்த சிறுமி மயக்கமடைந்ததில் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மயக்கம் தெளிந்து பார்த்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அறிந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். அதில் 2 இளைஞர்களும் தப்பி ஓடியுள்ளனர்.
அதில், வீட்டிற்குள் வந்த உரிமையாளர் மற்றும் அவரது மனைவி வந்து விசாரித்து உண்மை அறிந்ததும் போலீஸில் புகாரளித்துள்ளனர். அதன்படி, வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூபேஷ், நித்தீஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.