நேரடி அரசு பணி நியமனம் ரத்து..பிரதமா் மோடிதான் சமூக நீதியை காத்தார் - எல் முருகன்!
நேரடி பணி நியமன முறையை ரத்து செய்து பிரதமா் மோடி சமூக நீதியை காத்ததாக எல் முருகன் தெரிவித்துள்ளார்.
எல் முருகன்
மத்திய அரசு துறைகளில் உள்ள இயக்குனா்கள், இணை செயலாளா்கள் உள்ளிட்ட உயா் பதவிகளுக்கு நேரடி நியமன முறையில் பணியமா்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இது சமூக நீதி மீதான தாக்குதல் என முதல்வர் ஸ்டாலின் தொிவித்தார்.
மேலும் இந்த திட்டத்தை கைவிடும்படி கண்டனத்தை பதிவு செய்தார். இதேபோல் எதிர்க்கட்சி தலைவா்களான ராகுல்காந்தி மட்டுமின்றி, பாஜகவின் கூட்டணி கட்சிகளான லோக் ஜனசக்தி, பாமக உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் தெரிவித்தனர்.
நேரடி நியமனம்
இந்த நிலையில் மத்திய அரசு நேற்று அதிரடியாக, லேட்டரல் என்ட்ரி எனப்படும் நேரடி பணி நியமன முறையை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் பேசிய எல். முருகன்,
சென்னை விமான நிலையத்தில் வைத்து பேசிய எல் முருகன் கூறுகையில்," மத்திய அரசு துறைகளில் நேரடி பணி நியமன முறையை பிரதமா் மோடி ரத்து செய்துள்ளார்.இதன் மூலம் சமூக நீதியை பிரதமா் மோடி காத்துள்ளார்.
எந்த விதத்திலும் யாரும் பாதிக்கப்பட கூடாது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் பிரதமா் மோடியின் விருப்பம். மலேசிய பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவருக்கு என்று இருக்கை அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படட்டும்" என்று தெரிவித்துள்ளார்.