மக்களைச் சந்திக்காதது ஏன்? பொதுவெளியில் முதல்வர் மன்னிப்பு கேட்கனும்..எல்.முருகன் ஆவேசம்!

M K Stalin BJP Death Kallakurichi
By Swetha Jun 21, 2024 05:30 AM GMT
Report

கள்ளச்சாராயம் மரணம் குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார்.

எல்.முருகன் ஆவேசம்

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சாராயம் விற்பனை நடந்துள்ளது. அதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. உடனே, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.தற்போது வரை விஷசாராயம் குடித்து பலியானவர்கள் என்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

மக்களைச் சந்திக்காதது ஏன்? பொதுவெளியில் முதல்வர் மன்னிப்பு கேட்கனும்..எல்.முருகன் ஆவேசம்! | L Murugan Condemns Stalin For Kallakurichi Deaths

இந்நிலையில், கோவை விமான நிலையத்திற்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு இது குறித்து செய்தியர்களிடம் பேசினார். அப்போது, தமிழக அரசியல் வரலாற்றில் இன்று மிகப்பெரிய கருப்பு தினம். கள்ளக்குறிச்சி சம்பவத்தை யாராலும் ஏற்று கொள்ள முடியாது.

இச்சம்பவம் திமுக அரசின் கையாளாகத்தனத்தை காட்டுவது மட்டுமல்லாமல், இது போலி திராவிட மாடல்.ஆட்சிக்கு வந்தததும் மதுவிலக்கு என்றார்கள். ஆனால் பல இடங்களில் இன்று மதுக்கடைகள் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது. திமுக அரசு இந்த சம்பவத்திற்கு முழுபெறுப்பேற்பதோடு, மதுவிலக்கு துறையின் அமைச்சர் பதவி விலக வேண்டும்.

கள்ளச்சாராய விவகாரம்; மேலும் 30 பேர் கவலைக்கிடம் - ஆட்சியர் அறிவிப்பால் அதிர்ச்சி!

கள்ளச்சாராய விவகாரம்; மேலும் 30 பேர் கவலைக்கிடம் - ஆட்சியர் அறிவிப்பால் அதிர்ச்சி!

மன்னிப்பு கேட்கனும்..

இந்த அரசு கள்ளச்சாரயத்திற்கு துணை போகின்ற அரசாக உள்ளது. மேலும் மக்களின் உயிரை எடுக்கின்ற அரசாக உள்ளது.இது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம் என்பதால் பொது வெளியில் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மக்களைச் சந்திக்காதது ஏன்? பொதுவெளியில் முதல்வர் மன்னிப்பு கேட்கனும்..எல்.முருகன் ஆவேசம்! | L Murugan Condemns Stalin For Kallakurichi Deaths

இந்த சம்பவம் நடந்து பலமணி நேரமாகியும் இதுவரை நிகழ்விடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் ஏன் பார்க்கவில்லை? மக்களைச் சந்திக்க முடியாத நிலையில் முதல்வர் இருக்கிறார்.மரக்காணம் சம்பவத்திலும் சிபிசிஐடி தான் விசாரித்தது. ஆனால் சிபிசிஐடி விசாரணை என்பது, சம்பவத்தை மூடி மறைக்கின்ற செயலாக தான் பார்க்கிறேன்.

குறிப்பாக தமிழகத்தில் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக திமுக கூட்டணி கட்சியினர் யாரும் வாய்திறக்கவில்லை. திமுக அரசின் மீது விமர்சனம் செய்ய அவர்கள் தயங்குகிறார்கள் என குற்றம் சாட்டினார்.