மணமகன் சொன்ன அந்த ஒரு வார்த்தை - கல்யாணமாகி 3 நிமிடத்தில் விவாகரத்து செய்த பெண்!
திருமணமாகி 3 நிமிடங்களில் மணமகள் தனது கணவனை விவாகரத்து செய்துவிட்டார்.
மணமகன் செயல்
துபாயில் ஒரு தம்பதி உறவினர்களை அழைத்து மிகவும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்தவுடன் அத்தம்பதி அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது மணமகள் கால் தடுமாறி கீழே விழுந்தார்.
உடனே, மணமகன் அவருக்கு கை கொடுத்து உதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோபம் அடைந்த மணமகன் தனது புது மனைவியை பார்த்து ''முட்டாள் பார்த்து நடக்கமாட்டாயா'' என்று கேட்டார்.
3 நிமிடத்தில் விவாகரத்து
இதனை தாங்கிக்கொள்ள முடியாத மணமகள் உடனே இந்த திருமணத்தை ரத்து செய்ய முடிவு செய்து நீதிபதியை அழைத்து, தனக்கு உடனே விவாகரத்து வேண்டும் என்று கேட்டார். உடனே நீதிபதியும் விவாகரத்து வழங்கிவிட்டார்.
திருமணமாகி வெறும் 3 நிமிடத்தில் இருவருக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டது. இதுதான் மிகவும் குறுகிய கால திருமணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த செய்திகள் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.