குவைத் கட்டட தீ விபத்து; 40 இந்தியர்கள் பலி - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

Fire Death World Kuwait
By Swetha Jun 13, 2024 03:44 AM GMT
Report

குவைத் கட்டட தீ விபத்து குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.

தீ விபத்து

தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. கேரளாவைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான இந்த கட்டிடத்தில் சுமார் 195 பேர் இருந்துள்ளனர். இந்த, குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பலர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்தனர்.

குவைத் கட்டட தீ விபத்து; 40 இந்தியர்கள் பலி - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு! | Kuwait Building Fire Accident Cm Stalin Condolence

அதில் தீயில் கருகி 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.உடலைகளை விரைந்து இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இதற்காக குவைத் விரைந்தார் இந்திய வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.

கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - தமிழர்கள் உள்பட 41 பேர் உடல் கருகி பலி!

கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - தமிழர்கள் உள்பட 41 பேர் உடல் கருகி பலி!

ஸ்டாலின் உத்தரவு

உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.

குவைத் கட்டட தீ விபத்து; 40 இந்தியர்கள் பலி - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு! | Kuwait Building Fire Accident Cm Stalin Condolence

காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.

இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்: இந்தியாவிற்குள்: +91 1800 309 3793 வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901 என்று குறிப்பிட்டுள்ளார்.