கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - தமிழர்கள் உள்பட 41 பேர் உடல் கருகி பலி!
பயங்கர தீ விபத்தில் 2 தமிழர்கள் உள்பட 41 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
பயங்கர தீ விபத்து
தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. கேரளாவைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான இந்த கட்டிடத்தில் சுமார் 195 பேர் இருந்துள்ளனர்.
இந்நிலையில், குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பலர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்தனர். அதில் தீயில் கருகி 41 பேர் உயிரிழந்தனர். 10 இந்தியர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
41 பேர் பலி
இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள பல மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில்,
முதலில் ஒரு வீட்டின் சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டு, வேகமாக பரவியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 40க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.