ஏன் நீங்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யணும்...? - கேள்வி கேட்ட பெண்ணுக்கு தரமான பதிலடி கொடுத்த குஷ்பூ..!
நடிகை குஷ்பூவிடம் பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து கேள்வி கேட்ட பெண்ணுக்கு பதிலடி கொடுத்துள்ளார் குஷ்பூ.
நடிகை குஷ்பூ
தமிழ் சினிமாவின் 90-களில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. இவர் ரஜினி, கமல், பிரபு, மோகன், கார்த்திக் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
புகைப்படங்கள் வைரல்
சமீபத்தில் குஷ்பூ உடல் எடையை குறைத்து செம சூப்பர் லுக்கில் அனைவரையும் ஆச்சார்யப்படுத்தினார். தற்போது, 51 வயதிலும் 20 வயது ஹீரோயின் போல உடல் எடையை குறைத்து அழகாக மாறி இருக்கும் நடிகை குஷ்பூவின் இளமை பொங்கும் புகைப்படங்களை பார்த்து அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இவர் வெளியிடும் புகைப்படங்கள் வேற லெவலுக்கு ரசிகர்களால் பார்க்கப்பட்டு லைக்குகளை குவிந்து வருகிறது.
கேள்வி கேட்ட பெண்
இந்நிலையில், சமீபத்தில் கோல்டன் நிறத்தில் இருக்கும் மாடர்ன் உடை ஒன்றை அணிந்து நடிகை குஷ்பூ புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.
அந்தப் புகைப்படத்தை பார்த்த ஒரு பெண், நீங்கள் அழகாகத்தான் இருக்கிறீர்கள். ஆனால் ஏன் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் தோல் திருத்தங்களை செய்யணும்? உங்களுடைய நல்ல தோற்றத்துடனே நீங்கள் வயதாகலாமே என பதிவு செய்திருந்தார்.
பதிலடி கொடுத்த குஷ்பூ
இதைப் பார்த்த நடிகை குஷ்பூ அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து நடிகை குஷ்பூ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “நீங்க தான் அதுக்கு காசு கொடுத்தீங்களா மை டியர்? மத்தவங்கள துன்புறுத்தி கிடைக்கும் சந்தோஷத்தில் உங்களுக்கு என்ன கிடைக்குதுனு தெரியல. உன்னை நினைச்சா அவமானமா இருக்கு” என்று பதிலடி கொடுத்துள்ளார்.