இஸ்லாம் ,கிறிஸ்துவம் பற்றி கிண்டலடிக்க தைரியம் உள்ளதா? மீம்ஸ்களால் குஷ்பு ஆவேசம்!
இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் பற்றி இப்படி பேசுவதற்கு தைரியம் உள்ளதா? என்று குஷ்பு ஆவேசமாகியுள்ளார்.
மீம்ஸ்களால்..
சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் லட்டு மீம்ஸ் மற்றும் கேலி கிண்டல்களுக்கு பாஜகவினர் பலரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.
ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "திருப்பதி லட்டு பற்றி அதிகம் பேசப்பட்டுள்ளது. இதில் நான் கவனித்ததெல்லாம், இந்து மதம் குறிவைக்கப்படும் போதெல்லாம், அமைதியாக கடந்து செல்லும் மனோபாவத்தைக் கொண்டிருக்குமாறு நாம் கேட்டுக் கொள்ளப்படுகிறோம்.
என்ன நியாயம்? ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்கிறேன், இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் பற்றி இப்படி பேசுவதற்கு (கிண்டல்) உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?
வேறு எந்த மதத்தை பற்றி தவறாகப் பயன்படுத்துவதை நினைத்தால் உங்கள் முதுகெலும்பு எல்லாம் நடுங்குகிறது. மதச்சார்பின்மை என்பது ஒவ்வொரு மதத்தையும் மதிப்பது தான். நீங்கள் இந்த விஷயத்தில் பாரபட்சமாக இருக்க முடியாது.
குஷ்பு ஆவேசம்
நான் இஸ்லாத்தை தொடர்ந்து பின்பற்றும் ஒரு பிறவி முஸ்லீம், ஆனால் நான் கடவுள் மீது பயபக்தியுள்ள இந்து குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட ஒரு இந்துவும் கூட.. எனக்கு எல்லா மதங்களும் ஒன்றுதான்.
இந்து மதத்தை அவமதிப்பதையோ, கிண்டல் செய்வதையோ சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்து மதத்திற்கு எந்த விதமான அவமரியாதையும் பொறுத்துக் கொள்ளப்படாது.
கலப்படம் செய்யப்பட்ட திருப்பதி லட்டு விவகாரம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் புண்படுத்துகிறது.
இதற்கு காரணமானவர்கள்ள் யாராக இருந்தாலும் அதற்கான விலையை கொடுக்க வேண்டும். வெங்கடேசப் பெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.