வீட்டிலேயே கொடுமை - திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை - விளாசும் குஷ்பு..!
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லை என்று பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு விமர்சனம் செய்துள்ளார்.
கோவில் தூய்மை பணி
கோயில்களை சுத்தம் செய்ய வேண்டும் என்ற மோடியின் அறிவுருத்தலின் படி சென்னையில் சிந்தாதிர்ப்பேட்டை உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.
Simplicity Level Of God @khushsundar Mam ?
— Manitha Kadavul Khushbu Mam (@KadavulKhushbu) January 20, 2024
Proud To Worship You Mam ?#Khushbu #KhushbuvinDevalayam #Khushboo #BJP #BJP4IND#templecleaniness#divineforce#spiritualawakening pic.twitter.com/fK4DKmBgjT
அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு பேசும் போது, நாம் அனைவரும் கோயில்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டு,
பராமரிக்க படாமல் இருக்கும் கோயிலை தான் சுத்தம் செய்ய வேண்டும் என்று இல்லை என்று கூறி, அனைத்து கோயில்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
எம்.எல்.ஏ வீட்டிலேயே....
மேலும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மக்களுக்கு தெரியும் என குறிப்பிட்ட அவர், திமுக எம்.எல்.ஏ வீட்டில் பெண் ஒருவருக்கு கொடுமை நடந்திருக்கிறது என்றும் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எதுவும் பேசவில்லை என குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், நிறைய வேலைகள் இருக்கும் காரணத்தால் ராமர் கோயில் கும்பபிஷேக விழாவில் பங்கேற்கவில்லை என்று கூறி, ராமர் கோவிலை பொருத்தவரை சாதி, மதம் கிடையாது என்று சுட்டிக்காட்டி, இது முற்றிலுமாக ஒற்றுமையை காட்டுவதற்று தான் மந்திரம் சொல்கிறோம் என கூறினார்.
மேலும் பாஜக தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சியாகவும்,தமிழ்நாட்டில் பாஜக பெரிய இடத்தில் இருக்கிறது என்ற குஷ்பூ, 2024-இல் மகப்பெரிய வெற்றியை பெறப்போவதாக நம்பிக்கை தெரிவித்து 400 இடங்களை தாண்டி பாஜக வெற்றி பெற்றிருக்கும் என்றார்.