மாமனார் என்னம்மா பண்ணாரு? ஏதாவது'னா அக்கா கிட்ட கேட்ருக்கலாமே..! MLA மருமகள் ஆடியோ..!
திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி குடும்பத்தார் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன.
மருமகள் ஆடியோ
இந்நிலையில், எம்.எல்.ஏ கருணாநிதியின் மருமகள் மெர்லின் ஆடியோ ஒன்றை இந்த விவகாரத்தில் வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். அந்த ஆடியோவில், இந்த பிரச்சனை எதனால் வந்தது என்று தனக்கு தெரியவில்லை என்றும், நடந்ததை புரிந்து கொள்ளாமல் மற்றொருவரை தவறாக பேசவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அரசியல் பின்புலத்தில் இருப்பதால், அதனை காரணமாக காட்டி, மிரட்டி தேவையற்ற அபாண்டமான புகாரை முன்வைப்பதாக கூறிய அவர், 3 நாட்களாக தான் சாப்பிடவும், தன்னுடைய மகளை பார்க்கமுடியாத சூழலுக்கும் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் வேதனையுடன் கூறுகிறார்.
அக்கா கிட்ட....
இதற்கு பின்னால் இருப்பது யார் என்று தனக்கு தெரியவில்லை என்ற அவர், உனக்கு அக்காவை பத்தி நல்லா தெரியும். உன்ன நான் கஷ்டப்படுத்தனும்னு நெனைச்சது இல்ல.
உன் கையால் எழுதி வைத்த லெட்டரை இப்ப தான் நான் பார்த்தேன். இவ்ளோ லவ், இவ்ளோ அஃபெக்சன் என் மீது வெச்சிருக்குற நீ எதுக்காக இதையெல்லாம் செய்ற. ஏதாவது வேணும்னா அக்கா கிட்ட கேட்ருக்கலாம். அத விட்டுட்டு ஒரு குடும்பத்தை டேமேஜ் பண்ணிட்டு இருக்க.
இதோட சீரியஸ்னெஸ் தெரியாம நீ இருக்க. என்ன பத்தி பேசுற, அண்ணன பத்தி பேசுற. அது பரவாயில்ல.
ஆனா எங்க மாமனார் (எம்எல்ஏ இ. கருணாநிதி) என்னமா பண்ணாரு? எத்தனை வருடம் உழைப்பு தெரியுமா? நைட்டு பகல் பார்க்காமல் உழைச்சு இந்த பதவிக்கு வந்துருக்காரு. பொது வாழ்க்கைல இருக்கிறவர் பத்தி பேசக்கூடாதுமா" என்று கூறியுள்ளார்.