NCW பதவியிலிருந்து திடீரென ராஜினாமா - குஷ்பூ கொடுத்த விளக்கம்!

BJP Narendra Modi Kushboo
By Vidhya Senthil Aug 15, 2024 05:26 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து திடீரென ராஜினாமா செய்ததன் காரணம் குறித்து குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

திடீர் ராஜினாமா 

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு, 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியைத் அடைந்தார். பின்னர், குஷ்புவுக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

NCW பதவியிலிருந்து திடீரென ராஜினாமா - குஷ்பூ கொடுத்த விளக்கம்! | Kushboo Resigns As Member Of Ncw 

இந்த நிலையில் தான் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அப்போது மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குஷ்பு குரல் கொடுக்கவில்லை எனவும், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் சர்ச்சை கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இதனிடையே, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு ராஜினாமா செய்வதாகவும், அதற்கான கடித்ததை துறை அதிகாரிக்கு அனுப்பியதாகவும் தகவல் வெளியான சில நிமிடங்களில் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

முன்ன குண்டு...இப்ப கிழவி... அம்மாவுடன் கம்பேர் பண்ணி பேசுனாங்க - குஷ்பு மகள் உருக்கம்!

முன்ன குண்டு...இப்ப கிழவி... அம்மாவுடன் கம்பேர் பண்ணி பேசுனாங்க - குஷ்பு மகள் உருக்கம்!

இந்நிலையில், ராஜினாமா குறித்து குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அரசியலில் 14 ஆண்டுகால அர்ப்பணிப்புக்கு பிறகு, இன்று ஒரு இதயபூர்வமான மாற்றத்தை உணர்கிறேன். நமது பாஜகவில் முழுமையாக சேவை செய்வதற்காக தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டேன்.

NCW பதவியிலிருந்து திடீரென ராஜினாமா - குஷ்பூ கொடுத்த விளக்கம்! | Kushboo Resigns As Member Of Ncw

 குஷ்பு விளக்கம்

இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். என்னுடைய விசுவாசமும், நம்பிக்கையும் எப்போதும் பாஜக உடன்தான் இருக்கும். எப்போதும் இல்லாத உற்சாகத்துடன் நான் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டேன்.

தேசிய மகளிர் ஆணையத்தில் ஒரு பகுதியாக இருப்பதால் அதன் கட்டுப்பாடுகள் இருந்தன, ஆனால் இப்போது நான் முழு மனதுடன் சேவை செய்ய சுதந்திரமாக இருக்கிறேன். நாளை காலை சென்னை #கமலாலயத்தில் நடக்கும் கொடியேற்று விழாவில் கலந்து கொள்கிறேன்.

தீவிர அரசியலில் இருந்து எனது இடைவெளி, பிரதமரின் தொலைநோக்கு திட்டங்களை முன்னோக்கி தள்ளும் எனது உறுதியை வலுப்படுத்தியுள்ளது. வதந்தி பரப்புபவர்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம்;

நான் திரும்புவது உண்மையானது மற்றும் கட்சி மற்றும் மக்கள் மீது எனக்குள்ள அசைக்க முடியாத அன்பினால் அளிக்கப்பட்டுள்ளது. இதோ புதிய தொடக்கங்கள் மற்றும் நமது தேசத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்கிறது என்று பதிவிட்டுள்ளார்.