உயிருள்ள வரை முஸ்லீம் தான் - ராமர் விவகாரம்..நெட்டிசனின் சர்ச்சை - குஷ்பு பதிலடி..!

Tamil nadu BJP Kushboo
By Karthick Jan 26, 2024 01:43 AM GMT
Report

தான் உயிருள்ளவரை முஸ்லீமாக தான் இருப்பேன் என நடிகையும், பாஜகவின் குஷ்பு தெரிவித்துள்ளார்.

ராமர் கோவில் விவகாரம்

ராமர் கோவில் குறித்து சர்ச்சை கருத்துக்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. நாட்டில் சிறுபான்மையின மக்கள், பாஜகவால் ஒடுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் பலவும் குற்றம்சாட்டி வருகின்றனர். 

இப்போதைக்கு அயோத்தி கோவிலுக்கு செல்ல வேண்டாம் - பிரதமரின் திடீர் அறிவுறுத்தல்

இப்போதைக்கு அயோத்தி கோவிலுக்கு செல்ல வேண்டாம் - பிரதமரின் திடீர் அறிவுறுத்தல்

இதற்கு பாஜகவின் கட்சியினரும் தொடர்ந்து பதிலடி கொடுத்த வண்ணமே உள்ளனர். அப்படி ஒரு ட்வீட் தான் தற்போது வைரலாகி வருகின்றது.

kushboo-repsonds-to-netizen-in-ramar-temple-issue

ராமர் கோவில் திறப்பு குறித்து பேசிய குஷ்பு, தன்னால் ராமர் கோவில் திறப்பிற்கு செல்ல முடியவில்லை என்றாலும் கூட அவருக்காக ஒரு பாடலை பாடுகிறேன் பாடல் ஒன்றை பாடி இருந்தார்.

உயிருள்ள வரை முஸ்லீம் தான்

கடந்த 2018-ஆம் ஆண்டு குஷ்பு பதிவிட்டிருந்த கருத்து ஒன்றை பகிர்ந்த நெட்டிசன் ஒருவர், அவரை விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள குஷ்பு, நான் இப்பொழுதும் இஸ்லாமியர் தான், இறக்கும் தருவாயிலும் அப்படித் தான் இருப்பேன்.

உங்களைப் போன்ற சில ஆட்கள் தான் மதத்தை கொண்டு பிரிவினைகளை பற்றி யோசிக்கிறார்கள். உங்களுடைய எண்ணங்களை பெரிதுபடுத்தி கொள்ளுங்கள் என்று அதிரடியாக பதிலளித்துள்ளார்.