பெண்கள் சாராயம் குடிக்கும் அளவிற்கு கள்ளக்குறிச்சி போலீஸ் என்ன செய்தது? குஷ்பு அதிரடி!
தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் குஷ்பு காவல் நிலையம் சென்று சில தகவல்களை கேட்டறிந்தார்.
குஷ்பு அதிரடி கேள்வி
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சாராயம் விற்பனை நடந்துள்ளது. அதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. உடனே, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.தற்போது வரை விஷசாராயம் குடித்து பலியானவர்கள் என்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
பூகம்பமாக வெடித்த இந்த விவகாரத்துக்கு எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திமுக அரசின் மீது தங்களது அதிருப்தியை காட்டி வருகின்றனர். இந்நிலையில் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்துள்ளது.
போலீஸ் என்ன செய்தது?
இதையடுத்து கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயதால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற சென்ற தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் குஷ்பு கள்ளக்குறிச்சி காவல் நிலையம் சென்று ஆய்வு மேற்கொண்டார். பெண்கள் சாராயம் குடிக்கும் அளவிற்கு கள்ளக்குறிச்சி போலீஸ் என்ன செய்து?
என காவல்துறையிடம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பினார். கள்ளச்சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவித்த குஷ்பு, கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டதில் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர்.
ஆகவே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும், கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.