சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்!

Football Uttar Pradesh Kerala Festival
By Sumathi Feb 22, 2025 02:30 PM GMT
Report

கும்பமேளாவில் குளிக்காதது குறித்து கால்பந்து வீரர் ஒருவர் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

கும்பமேளா

உத்தரப்பிரதேசம், பிரயாக் ராஜ்நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

football player vineeth

எனவே, நாடு முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று புனித நீராடி வருகின்றனர். மேலும், பல முக்கிய பிரமுகர்களும் இங்கு சென்று நீராடுகின்றனர்.

கங்கை நீரை எடுத்து ஆய்வு செய்த நபர் - இறுதியில் நடந்த அதிசயம்!

கங்கை நீரை எடுத்து ஆய்வு செய்த நபர் - இறுதியில் நடந்த அதிசயம்!

கால்பந்து வீரர் கருத்து

இந்நிலையில், கும்பமேளாவுக்கு சென்றிருந்த கேரள மாநில கால்பந்து வீரரான வினீத் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில்,

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! | Kumbh Mela Is So Dirty Footballer Vineeth

மகா கும்பமேளா நிகழ்வு ஒரு சிறந்த நிகழ்வு என்று நினைத்து அங்கு நான் சென்றேன். என் அனுபவத்தில் அது அப்படி இல்லை. மிகப்பெரிய கூட்டம் இருந்தது.

திரி வேணி சங்கமத்தில் தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்தது. சிரங்கு அரிப்புடன் திரும்பி வர நான் விரும்பவில்லை. இதனால் அந்த அழுக்கு நீரில் நான் குளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.