கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி காலவரையறையின்றி மூடல் - என்ன காரணம்?
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கலைக்கல்லூரி
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறையில் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு வகுப்பில் ஆசிரியை, மாணவர்களை சாதி ரீதியாகப் பேசியதாகக் கூறி கடந்த 6 நாட்களாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அந்த பேராசிரியை விடுப்பில் சென்றால். ஆனால், துறை நீதியாக பேராசிரியை மீது பணியிடை நீக்கம் மற்றும் இடமாற்றம் செய்ய வேண்டும் என மாணவர்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர்.
தொடர் போராட்டம்
இந்நிலையில், கடந்த 6 நாள்களாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இதுகுறித்து கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்லூரியின் அசாதாரண சூழல் கருதி கல்லூரி ஆட்சிமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி, மறு உத்தரவு வரும் வரை கல்லூரி காலவரையறையின்றி மூடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.