தமிழகத்தில் உருவாகும் புதிய மாவட்டம் - எந்த பகுதி தெரியுமா?
புதிய மாவட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதிய மாவட்டம்
கடந்த வருடம் சட்டசபையில் புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகரங்களை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், சட்டசபையில் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்.எல்.ஏ.அன்பழகன் கோரிக்கை விடுத்தார்.
கும்பகோணம்
கும்பகோணம் மக்கள் பொதுவாக ஆட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கூட தஞ்சாவூர் செல்ல வேண்டி உள்ளது. இதற்கு கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரை ஆகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் கும்பகோணத்தை உடனே மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் கும்பகோணம் மாவட்டம் உருவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஆட்சியில் வேலூர் மாவட்டத்திலிருந்து நிர்வாக வசதிக்காக ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.