இனி..பழநி, கும்பகோணம் புதிய மாவட்டம் - விரைவில் அறிவிப்பு!
பழநியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக உள்ளது.
புதிய மாவட்டம்
தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. இதில், நிலப்பரப்பில் பெரிய மாவட்டமாக திண்டுக்கல் உள்ளது. இந்நிலையில், அமைச்சர் சக்கரபாணி மற்றும் எம்எல்ஏக்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரம், பழநி; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம்,
உடுமலை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளை பிரித்து, பழநியை தலைமையிடமாக வைத்து, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தினர். தொடர்ந்து, கும்பகோணத்தை தலைமையிடமாக்கி மாவட்டம் உருவாக்க பாமக வலியுறுத்தி வருகிறது.
விரைவில் அறிவிப்பு
அதன் அடிப்படையில், புதிதாக 5 மாவட்டங்களை உருவாக்க முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாகவும், நடப்பு பட்ஜெட் கூட்டத்தில், ஒன்று அல்லது இரண்டு புதிய மாவட்டங் களுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், திருவண்ணாமலை, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், திருச்சி, திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.