மகா கும்பமேளா.. ரயில் எஞ்சின் பெட்டிக்குள் பயணிகள் செய்த காரியம் - அதிர்ச்சி வீடியோ!
ரயிலில் இடம் கிடைக்காததால் ரயில் எஞ்சின் பெட்டிக்குள் சென்று பயணிகள் கதவைப் பூட்டி கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகா கும்பமேளா
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மகா கும்பமேளா திருவிழா கடந்த ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த பிரம்மாண்ட திருவிழாவில் முனிவர்கள், துறவிகள், பாபாக்கள், அகோரிகள் ,அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகிறனர்.
அதன்படி, இதுவரை 40 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளனர்.இந்த நிலையில் மகா கும்பமேளாவிற்குச் செல்வதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.மேலும் இடவசதி இல்லாததால் ரயிலில் பெட்டிகளிம் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் காட்சிகள் சமீபகாலமாக வெளியாகி வருகிறது.
அதிர்ச்சி வீடியோ
அந்த வகையில் வாரணாசி ரயில் நிலையம் ரயில் ஒன்றில் இடம்பிடிக்கப் பயணிகள் சிலர் ரயில் எஞ்சின் பெட்டிக்குள் ஏறி இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர். இந்த தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் அரசு ரயில்வே காவல்துறை (GRP)உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது ரயில் எஞ்சின் பெட்டிக்குள் இருந்த சுமார் 20 பயணிகளை அப்புறப்படுத்தினர். தற்பொழுது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.