சூர்யா சொன்ன அந்த விஷயம்; நன்றியே இல்ல சார்.. - போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நடிகர் சூர்யா குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியுள்ளார்.
ஆதவன்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆதவன். இந்த படத்தில் நடிகர் சூர்யா சிக்ஸ் பேக் வைத்து மிரட்டியிருந்தார். இந்நிலையில் நடிகர் சரத்குமாரோடு, சூர்யாவை ஒப்பிட்டு கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் "சரத்குமார் உடற்பயிற்சியில் அடிட். அதனால்தான் இந்த வயசிலும் அவரால் இவ்வளவு பிட்டாக இருக்க முடிகிறது. ஆனால் ஆதவன் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் போது சூட்டிங் ஸ்பாட்டில் வருத்தமாக இருந்தார்.
நன்றியே இல்ல சார்
என்னவென்று கேட்டபோது "இந்த வயிற்றுக்கு கொஞ்சம் கூட நன்றியே இல்ல சார்.. இவ்வளவு ஒர்க் அவுட் பண்ணுறேன். ஆனாலும், நேற்று ஒரு நாள் தான் கொஞ்சமாக சாப்பிட்டேன். உடனே இங்கு தொங்கிடுச்சு" என்று புலம்புவார்.

சூர்யா வயசுக்கு ஆதவன் படத்தில் நடிக்கும் போது அப்படி புலம்புகிறார் என்றால், இப்போதும் சரத்குமார் இப்படி பிட்டாக இருப்பதற்கு எவ்வளவு உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்? சரத்குமார் உடற்பயிற்சியை சந்தோஷமாக செய்வதால் இன்னமும் அவரால் இளமையாக இருக்க முடிகிறது" என்று தெரிவித்துள்ளார்.  
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    