வாக்கிங் போன கே.எஸ்.அழகிரி - கீழே விழுந்ததில் பலத்த காயம்!

Indian National Congress Cuddalore
By Sumathi Jul 29, 2023 05:41 AM GMT
Report

கே.எஸ்.அழகிரி நடைபயிற்சிக்கு சென்ற போது கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது.

கே.எஸ்.அழகிரி

கடலூர், சிதம்பரம் சென்றுள்ள கே.எஸ்.அழகிரி, அங்கிருக்கும் கீரப்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார். வழக்கம்போல் நடைபயிற்சி மேற்கொள்ளச் சென்றார்.

வாக்கிங் போன கே.எஸ்.அழகிரி - கீழே விழுந்ததில் பலத்த காயம்! | Ks Azhagiri Walking Accident Severe Injuries

அப்போது தவறி எதிர்பாராதவிதமாக கால் இடறி தலைகுப்புற விழுந்துள்ளார். அதில் அவரது முழங்கால் மற்றும் நெற்றியில் பலத்த அடிபட்டு ரத்தம் வந்துள்ளது. உடனடியாக அவருடன் சென்றவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

 பலத்த காயம்

அதனையடுத்து, முழங்காலில் கடும் வலி ஏற்பட்டதால் எக்ஸ்‌ரே உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இன்னும் ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் கேட்டுக்கொண்ட நிலையில்,

வாக்கிங் போன கே.எஸ்.அழகிரி - கீழே விழுந்ததில் பலத்த காயம்! | Ks Azhagiri Walking Accident Severe Injuries

வீட்டில் ஓய்வெடுப்பதாக கூறி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். இதனால், அவர் இளையபெருமாள் நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.