Wednesday, Jul 16, 2025

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி - கே.எஸ்.அழகிரியை டெல்லிக்கு அழைக்கும் கங்கிரஸ் தலைமை

Indian National Congress Rahul Gandhi Tamil nadu
By Karthick 2 years ago
Report

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைக்காக கே.எஸ்.அழகிரி டெல்லி செல்லவுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல்

வரும் நாடாளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலான ஒன்றாக இருக்கின்றது.10 ஆண்டுகளாக இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றவிட நினைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது பெரும் பின்னடைவை பாஜக கொடுத்து வருகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ks-alagiri-to-go-to-delhi-to-hold-election-talks

ஆனால், வலுவான இந்தியா கூட்டணியை அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி நம்பிக்கையுடன் பெரும் முயற்சிகளை கையாண்டு வருகின்றது. இந்நிலையில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.

அடுத்த ரவுண்டு துவங்கும் ராகுல்..! மீண்டும் பாரத் ஜோடோ யாத்ரா 2.0..!

அடுத்த ரவுண்டு துவங்கும் ராகுல்..! மீண்டும் பாரத் ஜோடோ யாத்ரா 2.0..!

டெல்லி செல்லும் அழகிரி

தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலவரம், தொகுதி பங்கீடு, கூட்டணி குறித்தான இணக்கங்கள் போன்றவற்றை குறித்து பேச காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

ks-alagiri-to-go-to-delhi-to-hold-election-talks

இந்த பேச்சுவார்ததை வரும் டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் நடைப்பெற உள்ளது. இதில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.ஸ்.அழகிரி, கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தொகை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர்,செல்லக்குமார் ஆகியோருக்கு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.