அடுத்த ரவுண்டு துவங்கும் ராகுல்..! மீண்டும் பாரத் ஜோடோ யாத்ரா 2.0..!

Indian National Congress Rahul Gandhi
By Karthick Dec 22, 2023 11:56 PM GMT
Report

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் பாரத் ஜோடோ யாத்திரையை துவங்கவுள்ளார் என்ற செய்திகள் வெளிவந்துள்ளது.

பாரத் ஜோடோ யாத்ரா

நடந்து முடிந்த கர்நாடகம் மற்றும் தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்ததற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா என காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றார்.

rahul-gandhi-starting-bharat-judo-yathra-again

நாட்டின் பல பகுதிகளை நடந்து சென்று மக்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி பெரும் எழுச்சியை ஏற்படுத்திவிட்டதாகவும் கூறப்படும் நிலையில், ராகுல் காந்தியின் முயற்சியும் தேர்தல் அரசியலுக்கு உதவியது என்றும் கூறலாம்.

மீண்டும் பாரத் ஜோடோ யாத்ரா

இந்நிலையில், மீண்டும் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ராயை துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவை வலுவாக எதிர்க்கஇந்தியா கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி ஆயுத்தமாகி வருகின்றது.

rahul-gandhi-starting-bharat-judo-yathra-again

அக்கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில் தான் தற்போது மீண்டும் பாரத் ஜோடோ யாத்ரா துவங்கவிருக்கிறார் ராகுல் காந்தி. கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி இரண்டாவது யாத்திரை செய்ய வேண்டும் என கூட்டணி கட்சி தலைவர்கள் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.