கே.எஸ்.அழகிரி மகள் திருமண வரவேற்பு - சால்வையை வெடுக்கெனெ வாங்கிய சிவக்குமார்!
காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மகள் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.
திருமண வரவேற்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மகள் காஞ்சனா அழகிரி - வினோத் ரங்கநாத் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவான்மியூரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக கூட்டணிக்கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தலைவர்கள் பங்கேற்பு
மேலும், இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கர்நாடக தேர்தல் பணி காரணமாக அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. இதற்கிடையில், அனைத்து முக்கிய பிரமுகர்களுக்கும் கே.எஸ்.அழகிரி சால்வை அணிவித்து வரவேற்றார்.

அந்த வகையில் நடிகர் சிவக்குமாரையும் அது போல் வரவேற்க கையில் சால்வையை பிரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, கே.எஸ்.அழகிரியிடமிருந்து, சால்வையை வெடுக்கென வாங்கி அதை மீண்டும் அழகிரிக்கே அணிவித்து மகிழ்ந்தார்.
ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலடி...! அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள நேரடிப் போர் எச்சரிக்கை IBC Tamil
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan