இந்தியாவில் உலக அழகி போட்டி - பட்டம் வென்ற பெண் யார் தெரியுமா?
செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, 2024-ம் ஆண்டுக்கான 71வது உலக அழகி பட்டத்தை வென்றார்.
உலக அழகி போட்டி
இந்தியாவில் கடந்த 1996-ம் ஆண்டு உலக அழகி போட்டி நடத்தப்பட்டது. தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் 71வது உலக அழகி போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் 115 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இதன் இறுதிப்போட்டி நேற்று மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
கிறிஸ்டினா பிஸ்கோவா
இதில் இந்தியா, அயர்லாந்து, எஸ்தோனியா, வடக்கு அயர்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த அழகிகள் தகுதி பெற்றனர். இந்நிலையில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, 2024-ம் ஆண்டுக்கான 71வது உலக அழகி பட்டத்தை வென்றார்.
லெபனான் நாட்டை சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன் இரண்டாம் இடம் பிடித்தார். மேலும், வெற்றி பெற்ற கிறிஸ்டினா பிஸ்கோவாவுக்கு 2021-ம் ஆண்டு பட்டம் வென்ற போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா உலக அழகிக்குரிய மகுடத்தை சூட்டினார்.