பிரபாஸ் உடன் காதல்.. உண்மையை உடைத்த பிரபல நடிகை!

Anushka Shetty Gossip Today Bollywood Indian Actress Prabhas
By Sumathi 2 மாதங்கள் முன்

பிரபாஸ் உடனான காதல் சர்ச்சை குறித்து நடிகை க்ரிட்டி சனோன் பதிலளித்துள்ளார்.

காதல் சர்ச்சை

ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ், பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோன், சயிஃப் அலி கான் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஆதிபுருஷ் படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. இந்நிலையில் அந்த படத்தில் நடித்தபோது பிரபாஸுக்கும், க்ரிட்டி சனோனுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

பிரபாஸ் உடன் காதல்.. உண்மையை உடைத்த பிரபல நடிகை! | Kriti Sanon Clears Love Rumours About Prabhas

மேலும் படப்பிடிப்பு முடிவதற்குள் க்ரிட்டியிம், பிரபாஸ் ப்ரொபோஸ் செய்தார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், நடிகை க்ரிட்டி சனோன் இதுகுறித்து முதன்முறையாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

முற்றுப்புள்ளி

அதில் தன்னைப்பற்றி பரவி வரும் காதல் செய்திகள் துளியும் உண்மையில்லை என்றும் அவை அனைத்தும் வதந்திகள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் பிரபாஸை தான் காதலிக்கவில்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.

பிரபாஸ் உடன் காதல்.. உண்மையை உடைத்த பிரபல நடிகை! | Kriti Sanon Clears Love Rumours About Prabhas

இதற்கிடையில், சில வருடங்களாகவே பிரபாஸுக்கும் அனுஷ்காவுக்கும் இடையே காதல் இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இருவரும் லிவிங்கில் இருப்பதாக கூட செய்திகள் வெளியாகின. இருவரும் 40 வயதை கடந்துள்ள நிலையில், எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.