காதல் திருமணம் செய்த மகள் - மருமகனை கழுத்தறுத்து ஆணவக்கொலை செய்த மாமனார்!
காதல் திருமணம் செய்து கொண்ட மருமகனை மாமனார் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
கிருஷ்ணகிரி, கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன் (28). இவர் டைல்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முழுக்கான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வேலைக்கு காவேரிப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெகனை வழிமறித்த அவரது மாமனார் சங்கர் மற்றும் உறவினர்கள் கழுத்தை கத்தியால் அறுத்து தப்பி ஓடியுள்ளனர்.
ஆணவக்கொலை
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து ஜெகனின் உடலை எடுக்க விடாமல் பொதுமக்களும் உறவினர்களும் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியல் செய்தனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழரசி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சராஜ் குமார், தாகூர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உறவினரிடம் சமாதானமாக பேசியதன் அடிப்படையில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனையடுத்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கொலை செய்த பெண்ணின் தந்தை சங்கர் கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.