சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மறைவு - முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணா மறைவு
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் பல்வேறு மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்துள்ள நிலையில், இவர் பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் இரங்கல்
இதனைத் தொடர்ந்து, பழம்பெரும் தெலுங்கு நடிகர் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மறவு வருத்தமளிக்கிறது. பல புதுமைகளுக்கு முன்னோடியாக இருந்தவர்.
அவரது மறவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. கிருஷ்ணாவின் மறைவுக்கு என் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். அவருடைய குடும்பத்திற்கும் ஆறுதலை தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.