பிரபல நடிகரின் தந்தை மரணம் : சோகத்தில் திரையுலகம்.
Mahesh Babu
By Irumporai
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா காலமானார்.
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் பல்வேறு மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்துள்ள நிலையில், இவர் பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.