தன் மகனுக்கு கிருஷ்ணர் வேடமிட்ட முஸ்லீம் தாய் - வைரலாகும் வீடியோ - குவியும் பாராட்டு
கிருஷ்ணர் ஜெயந்தி
இன்று கிருஷ்ணர் ஜெயந்தியை நாடு முழுவதும் உள்ள இந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் போல் வேடமிட்டு புகைப்படத்தை எடுத்து, டுவிட்டர், இன்ஸ்டாவில் பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
தன் மகனுக்கு கிருஷ்ணர் வேடமிட்ட முஸ்லீம் தாய்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. கிருஷ்ணா தஹி ஹண்டி திருவிழாவிற்கு ஒரு முஸ்லிம் தாய் தன் மகனுடன் வந்தார்.
தன்னுடைய 8 வயது மகன் ஆஹாத் முஜாவருக்கு கிருஷ்ணர் போல் வேடமிட்டு கிருஷ்ணர் ஜெயந்தி வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்தார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இதுவே என் தேசத்தின் அழகு... என்று வாழ்த்து தெரிவித்து பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
यह मेरा इंडिया ??❤️??
— Mrityunjay Singh मृत्युंजय सिंह (@MrityunjayNews) August 19, 2022
8 साल का आहात मुजावर माँ की गोद में
कृष्णा बनकर दही हंडी उत्सव में पहुँचा ।
यही तो मेरे देश की खूबी है हर माँ का लाल कान्हा है । #KrishnaJanmashtami #india #Krishna #Janmashtami @jitendradixit @romanaisarkhan @RubikaLiyaquat @rajivkhandekar @santprai pic.twitter.com/1HZ1HMQsVt
