கடை ஒன்றில் திடீரென வெடித்து சிதறிய மொபைல் போன்..!
மத்திய பிரதேசத்தில் கடை ஒன்றில் திடீரென மொபைல் போன் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடையில் வெடித்து சிதறிய மொபைல் போன்
மத்திய பிரதேசத்தில் மொபைல் கடை ஒன்று உள்ளது. அந்த மொபைல் கடையில் வாடிக்கையாளர் ஒருவர் வந்து மொபைல் போன் கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது, மொபைல் போன் கடைக்காரர் அருகில் இருந்த மொபைல் போனை எடுத்து பார்க்கிறார்.
அப்போது, மொபைல் போனில் உள்ள பேட்டரி திடீரென வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது. மொபைல் போன் திடீரென்று வெடித்து சிதறியதால் வாடிக்கையாளரும், கடைக்காரரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
ஆனால், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

OMG ??
— Madhu TV9 (@themadhuin) August 18, 2022
Mobile phone explosion in Madhya Pradesh caught on camera #Viralpic.twitter.com/4eA7ZBdgVF