கிருஷ்ண ஜெயந்தி..வழிபாடு செய்ய உகந்த நேரம் இதுதான்!
இந்துக்கள் பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி (ஆக.26 தேதி) நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் வழிபாடு செய்ய உகந்த நேரம் எப்போது என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
கிருஷ்ண ஜெயந்தி
பெருமாளின் பத்து அவதாரங்களில் கிருஷ்ண அவதாரமும் ஒன்று. கம்ஷ மஹாராஜனை கொல்ல அஷ்டமியில் எட்டாவது குழந்தையாகப் பகவான் அவதாரம் எடுப்பார். ஆவணி மாதம் அஷ்டமி திதியில் பகவான் கிருஷ்ணரின் அவதாரம் நிகழ்வதால் ஆவணி மாதம் அஷ்டமியை ஜென்ம அஷ்டமியாகக் கொண்டாடுகிறோம்.
பொதுவாகக் கிருஷ்ணர் என்றாலே அனைவரையும் வசீகரிப்பவர் புல்லாங்குழல் ஓசை , புன்னகை,அழகு. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எண்ணற்ற அவதாரங்களைக் கொண்டுள்ளார்.
வழிபடும் நேரம்
பெருமாளின் ஒவ்வொரு அவதாரமும் ஒரு குறிப்பிட்ட சிறப்பு அம்சம் உடையதாகும். ஆனால் கிருஷ்ண அவதாரம் சிறப்பு மிக்கவை. கிருஷ்ணர் பிறந்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி உள்ளிட்ட பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்துக்கள் பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி (ஆக.26 தேதி) நாளை கொண்டாடப்படவுள்ளது.கிருஷ்ணனுக்கு பிடித்த வெண்ணை ,லட்டு, வெண்ணெய் உள்ளிட்ட பொருள்களை வைத்து மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் பூஜை செய்து வழிபடவேண்டும்.